உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Monday, January 19, 2009

ஆயிரம் ரூபாய் அதிசயம் அழகி

ஆயிரம் ரூபாய் அதிசயம்- அழகி

எங்கும் தமிழ்..எதிலும் தமிழ் என்பது..நம் தமிழர்களின்..இடைவிடாத முழக்கம். ஆனால்..இது சாத்தியமா என்னும் வினாவினை எழுப்புகையில் விடையாக கிடைப்பது..கேள்விக்குறிதான்.
பத்திரிக்கைகளின் பெயர்களில் தமிழ் இல்லை.பைந்தமிழில்..அந்நிய மொழி கலப்பின்றி..மேடையில் உரையாடும்..நற்றமிழ் பேச்சாளர்கள்..அருகி வருகிறார்கள்.
தொலைக்காட்சியில்..தமிழ் இல்லை. அதை திமிங்கலமாக்கி..தமிங்கிலிஷாக்கி
காசு பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
வளரும் தலைமுறைகளை உருவாக்கும்..தவச்சாலைகளான பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.ஆங்கிலம் பேசுவதே மனித நாகரிகத்தின் அடையாளம் என்கிற பார்வையில்..தமிழ் மொழியின் முக்கியத்துவம் காயடிக்கப்பட்டு வருகிறது.
நான்கு மனிதர்கள் சந்தித்து தங்களின் தேவைகள் நோக்கி உரையாடிக்கொள்ளும் சூழலில்கூட..அவர்தம் நாவில்..அந்நியமொழி கலப்பை உபயோகித்து..என்ன செய்கிறோம் என அறியாமலே தாய்மொழி கற்பழிப்பை நிகழ்த்தும் அவலம்..அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
குழியில் விழுந்து..சிறைப்பட்ட யானையின் நிலையில்..பிளிறி தவிக்கிறது..நம் செம்மொழி. தாய்மொழியும்..தாய்பாலும்..ஒன்றேதான் என உணராத..தமிழர்கள் ஒரு பொய்யான வாழ்வியலை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை.
பில்கேட்ஸ் இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதன்..கணினியின் தொடர் வளர்ச்சிக்கு..இடையறாமல் உழைத்துக்கொண்டிருக்கும்..உலக வியாபாரி.
ஒட்டுமொத்த உலக பயன்பாட்டுக்காய் உருவாக்கிய கணினியில்..உலகமொழிகளில் கணினியை பயன்படுத்தவேண்டிய கட்டாயம் நேர்ந்துவருகிறது.
அவ்வகையில்..கணினியில் தமிழின் பயன்பாடு குறித்து ஆய்வுகளும் செய்யப்படாமல் இல்லை.
தட்டச்சு பயிலகங்களில்..ஆங்கில மொழிக்கு இருக்கும் ஆர்வமும் கூட்டமும்..அதை சார்ந்த பணிவாய்ப்புகளும் தமிழ் தட்டச்சு பயிற்சிக்கான முட்டுக்கட்டையாய் இருந்துவருகிறது.
கணினி பயன்பாட்டாளர்கள் கூட..அநேகம் பேர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் என அறுதியிட்டு கூறமுடியாது. அவர்கள் அனுப்பும் இணைய செய்திகள்(email), உணர்வின் வெளிப்பாட்டை அப்படியே காட்ட இயலாமல் சட்டமிடப்பட்ட படம் போல ஆங்கிலத்தில் செயற்கையாக உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்து வருகிறார்கள்.
நவீன கணினி வாய்ப்புகள்..ஒவ்வொரு தனி மனிதனையும் படைப்பாளிகளாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
BLOGS,CHATTING,MS OFFICE UTILITIES..என ஒவ்வொரு தளத்திலும் மொழியின் பயன்பாடு தீவிரப்பட்டிருக்கிறது. தொழில்முறை சாராத எழுத்தாளர்களை காலம் உருவாக்கும் கடடாயம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு தனி மனிதன் தனக்குமட்டுமே நிகழ்ந்த ஒரு அனுபவத்தை ஒட்டுமொத்த உலகோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இனி விடை இல்லா கேள்விகள் இல்லை என்னும் சூழலை நோக்கி கணினி தொழில் நுட்பம் சென்றுகொண்டிருக்கும் வேகத்தில்..நம் உணர்வுகளை நாம் நினைத்தவாறே..நம் தாய்மொழி தமிழில் வெளிப்படுத்த முடியாதா..?
இந்த எண்ணம் எல்லோர் மனதிலும் எழும்.
ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு தாய்மொழி தமிழில் இணைய செய்தி பரிமாற முடியாதா..?
BLOGகளீல்..தம் சுய அனுபவங்களை கவிதையாக,கட்டுரையாக,கதையாக..நம் தாய்மொழி தமிழில் எழுத முடியாதா..?
இத்தனை கேளிவிகளுக்கும் ஒரே விடை.."அழகி"
ஆம் உண்மையிலேயே அவள் அழகிதான்.தோற்றத்தில்.., உள்ளடக்கத்தில்..,நேர்த்தியில்.,நாளைய தேவைக்கு இன்றே உழைத்துக்கொண்டிருக்கும் அக்கறையில்..அவள் உண்மையிலேயே அழகிதான்.
"அழகி" UNICODE எனும் தொழில் நுட்பத்தில் நம் கணினியை முழுமையாக தாய் மொழி தமிழுக்கு மாற்றித்தரும்..உன்னத மென்பொருள்.
அழகியை சீதனமாய் என் கணினிக்குள் கொண்டுவந்த பிறகு ஆயிரம் யானைகளின் சக்தி கிடைத்திருக்கிறது எனக்கு.
நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கிறேன்..அழகி அதை அட்சர சுத்தமாய் செம்மொழி தமிழில் காட்டுகிறது.அமெரிக்காவில் இருக்கும் என் தோழமையோடு என்னால் தமிழில் CHAT செய்ய முடிகிறது.
என் அலுவல் கடிதங்கள் அத்தனையும்..என் உள்மனம் நினைக்கும் உண்மையான உணர்வோடு..தமிழில் உருவாக்க..உதவியாய் இருக்கிறாள் அழகி.
EXEL.,POWERPOINT.,PHOTOSHOP.,BLOGS,CHAT, இன்னும்..நானாவித தட்டச்சு தேவைகளுக்கும்..சற்றும் சளைக்காமல் தன் பங்களிப்பை செய்கிறாள் அழகி.
நான் ஒரு திரைப்பட இயக்குனர். இப்போது என்னால் வெகு வேகமாக எனக்கு தேவையான திரைகதையை அழகியின் உதவியோடு சர்வ சாதாரணமாக உருவாக்க முடிகிறது.
நான் தமிழன்..இப்போது..என் கணினியும் தமிழ் கணினி.
உங்களுக்கும் அழகி மிக சுலபமாக கிடைப்பாள். இணையத்தில் http://azhagi.com/free.html
எனும் தளத்தில்..அழகியை இலவச வடிவில் பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன் பெறமுடியும்.
இலவச வடிவைவிட ரூபாய் ஆயிரம் செலுத்தி.. azhagi proffessional மென்பொருளை உரிமையோடு வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.
நீங்களும் இன்னும் ஆயிரம் பேருக்கு அழகியை அறிமுகப்படுத்துவீர்கள்.
9840339750 என்கிற தொலைபேசியில் அழகியை அழையுங்கள்.
அவள் உங்கள் கணினிக்குள் வலது காலை எடுத்துவைத்து வரட்டும்.
அப்போதுதான்..உலகம் நம் உள்ளங்கையில் என்பது உண்மையாகவே புரியும்.
நான்..அழகிக்கான வியாபார முகவர் அல்ல.
அழகியின் பயன்பாட்டால்...நிறைவுபெற்று..யான் பெற்றதை இவ்வுலகும் பெற நினைக்கும்..ஒரு சாமானியன்.
அழகி-கணினியின் தமிழ் தேவைக்கான முன்னோடி.
ஆம்..ஆயிரம் ரூபாய் அதிசயம்.