உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Monday, March 16, 2009

ஞான விளையாட்டுகள்


மனித வாழ்வை வினையாட்டு என்பதா..?அல்லது விளையாட்டு என்பதா..? 
"...விளையாட்டுடை யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே .."- என ஒருபாட்டு வரும். வாழ்வு ஒரு விளையாட்டுதான். சிலர் நேர்த்தியாய் விளயாடி வெற்றி கோப்பையோடு வீடு திரும்புகிறார்கள். பலர் வெறுங்கையோடு கோப்பைக்காக அல்லாடத்தான் வேண்டியுள்ளது.

ஆம் நம் முன்னோர்கள் வாழும் கலையையும் விளயாட்டாகவே சொல்லி வைத்தார்கள்.ஏற்கனவே "வெறும் ஆட்டம் அல்ல கரகாட்டம்" கட்டுரை படித்திருப்பீர்கள், அந்த வரிசையில் இன்று நாம் முன்வைக்கும் விளையாட்டு "கும்மியாட்டம்" மற்றும் அதன் தன்மைகளை ஒத்திருக்கும் "தாண்டியா" ஆட்டம்.




இவை சாதாரண விளையாட்டுகள் அல்ல.தனிமனித வாழ்வியல் ஒழுங்கையும் ஒவ்வொரு தனி மனிதரும் தம் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பின் கடமையையும் உணர்த்த வேண்டி ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுகள் என்றால் மிகையில்லை.

இம்மாதிரியான விளையாட்டுகள் பொதுவாக திருவிழா காலங்களில் ஆடப்படுவது நாம் அறிந்ததே.நமகலாச்சாரத்தின் பார்வையில் திருவிழாக்களே பாட்ங்கள்தான்.கும்மி ஆட்டமும், தாண்டியா ஆட்டமும் திருவிழா காலங்களில் ஆடப்படும் ஆட்டங்களே. இவற்றில் ஆன்மீக சாரமும், உளவியல் கூறுகளும், அறிவியல் அற்புதங்களும் திரைமறைவில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.



நாம் பல்லாயிரம் முறை கோயிலுக்கு போயிருக்கிறோம். அர்ச்சகர் சாமிக்கு தீபாராதணைக் காட்டும் முறையை உன்னிப்பாக கவனித்து உள்வாங்கியிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடை. திருமூர்த்தத்தின் உச்சந்தலை துவங்கி..திருப்பாதம் வரை - ஒரு பாம்பு வளைந்திருப்பது போன்ற பாவனையில் நமக்கு காட்டும் நோக்கில், அந்த பாம்பினை அடையாளம் காட்டி - அதை கீழிருந்து மேல் உயர்த்தி எடுத்து சென்று மூர்த்தியின் முகத்தைக் காட்டுவார் அர்ச்சகர். குண்டலினி என்கிற பெயரும் அதன் முக்கியத்துவமும் , உள்ளர்த்தமும் மதப்பார்வையில் பார்க்கப்படுவதால் அதன் இன்றியமையாத தன்மையை உணரமுடியாமல் ஆகிவிட்டது.

குண்டலினியை - யோகவியல் சாராது - உளவியல் ரீதியான பார்வையில் பகுப்போமேயானால் "தனிமனித எழுச்சி"-என பொருள்கொள்ள முடியும். அறிவியல் ரீதியாக பொருள்கொண்டால் "உடலியல் உட்கூறுகளை நெறிப்படுத்துதல்"என பார்க்க முடியும்.

உலகவாழ்வே இம்மூன்று அம்சங்களைத்தான் சார்ந்துள்ளது.நாம் ஒவ்வொருவரும் நம் தனி மனித எழுச்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். அதன் பின் நம் சமூக பங்களிப்பை உனர்ந்து அதிலும் எழுச்சிக் காண வேண்டும். காரணம் நாம் தனிமனிதர்கள் மட்டுமல்ல..சமூக கூட்டமும் கூட. இந்த பிரிக்க முடியாத பந்தத்தை நாம் மற்க்காதிருக்கவே முன்னோர்கள் இத்தத்துவங்களை விளையாட்டிற்குள் பதுக்கி வைத்தார்கள் என கொள்ளமுடியும்.

அரசமரத்தடியில் இருக்கும் "நாகல்" நம் ஆறு ஆதார சக்கரங்களை குறிக்கும் அடையாளம் என ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அங்கு அது வணங்கப்படுவதற்கு, இங்கு அது உணர்ந்து, விளையாடி ஏற்றம் பெறுவதற்கு.
கும்மியாட்டத்தில் வெறும் கைகளை தட்டி ஓசையெழுப்புவதையும்,குனிந்து நிமிர்ந்து விளையாடுவதையும், கூட்டமாக, குழுவாக ஆண், பெண் என ஆடுவதையும் மட்டும்தான் மிக சாதாரன பார்வையில் பார்த்திருக்கிறோம்.
இப்போது நாம் குறிப்பிடும் முறையில் இந்த விளையாட்டை அணுகிப் பாருங்கள் அதில் பொதிந்த ஞானம் புலப்படும்.

கீழே மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை குனிந்து - அங்கிருந்து எழுப்பி - ஒவ்வொரு ஆதாரமாக உயர்த்தி -இறுதியில் தலை உச்சிக்குக்கொண்டுபோய் தட்டி முடிப்பது ஒரு சுற்று.- அதன் பின் அப்படி தட்டி முடித்த நிலையில் - அப்ப்டி எழுச்சியின் நிலைக்குப் போன ஒவ்வொருவரும் தமக்குள் அதாவாது தம் எழுச்சியை பிறரோடு பங்கிட்டுக்கொள்வதான ஒரு சுற்று. கீழ் நிலையிலிருந்து மேலுக்கு உயரும்போதே அடுத்தவரோடு இணைந்து, பகிர்ந்து ஒத்திசைவகளோடு கூட்டமாய் மூன்னேறும் வகையிலான ஒரு சுற்று. 
தனியாக கற்றல் - குழுவாக கற்றல்- கற்றதை பகிர்தல் - என்கிற பார்வை எவ்வளவு உன்னதமாய் இருக்கிறது பார்த்தீர்களா..?இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்வதனால் மனித சக்தியினை உயர்த்தியதன் விளைவை 
தனியாக பெறுதல்- குழுவாக பெறுதல் - ஒவ்வொருவரோடும் பகிர்தல் .
இந்த நிலை அறிவிலும், பொருளிலும் எட்டப்படுவதே உண்மையான சமதர்மம் ஆகிவிடுமல்லவா..?

கும்மியாட்டத்தில் மனிதனின் வலது - இடதான சக்திகள் பெருக்கல் குறியாய் அடையாளம் காட்டப்பட - கைகள் தட்டி ஓசை எழுப்பப்படுகிறது. தாண்டியா ஆட்டத்தில் வெறும் கைகளுக்கு பதிலாக இரண்டு குச்சிகள் - நம் மாயா குண்டலினி பெருக்கல் உறி வடிவத்தில் இயங்குவதை அடையாளமாக காட்ட பயன்படுத்தப்படுகிறது.

மனித வாழ்வில் ஆன்மிகமும்,உளவியலும்,அறிவியலும் பிரிக்க முடியாத அம்சங்கள். நமது நோக்கம் மனிதம் எழுச்சிப் பெற வேண்டும். அந்த எழுச்சி ஆன்மிகம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, உளவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, அறிவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி.
இம்மூன்று தத்துவங்களுக்கும் பொருந்துகிற வண்ணத்தில்தான் நம் முன்னோர்கள் அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டு போயிருக்கிறார்கள்.
புரிந்துகொண்டு விளையாடுவோம் வாருங்கள்..!

1 comment:

  1. அருமை நண்பரே. வாழ்த்துகள்.

    உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

    கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete